மீண்டும் இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – நேற்று மட்டும் 805 பேர் பலி
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.57 இலட்சத்தை கடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய, இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பாதிப்பு 3.42 கோடியை தாண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக 14 ஆயிரத்து 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,46,157ஆக அதிகரித்துள்ளதுடன் புதிதாக 805 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனால், நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 57 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து ஒரே நாளில் 13ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளதுடன் இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 27 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 334 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனா்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2ZBhrzo
via Kalasam
Comments
Post a Comment