நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் - ஜோன்ஸ்டன்
நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ள பேலியகொட புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகளை ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டார். புதிய களனிப் பாலம் கொழும்பு நகரின் அழகை மேம்படுத்தும் என்பதால் கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்ட பாலத்திற்கருகில் நிலத்தை அழகுபடுத்துவதற்காக நடப்பட்டுள்ள உள்ளூர் தாவரங்கள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார்.
புதிய களனி பாலத்தை பார்வையிடும் விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...
புதிய களினி பாலம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் என்பன எப்பொழுது மக்கள் பாவனைக்காக திறக்க்பபடும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
களனிப் பாலத்தின் பணிகளை நிறைவு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கிறோம். மேலும் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை மீரிகம தொடக்கம் குருநாகல் வரை பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சிறு கட்சிகள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சிறு கட்சிகளைச் சேர்ந்த ழுவொன்று தற்போது தனித்தனியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளன. பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு உரிமை இருக்கிறது. சிறு கட்சிகளின் இந்தக் கூட்டங்கள் எமக்கு ஒரு பிரச்சினையல்ல. அரசாங்கம் என்ற வகையில் நாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துகிறோம் என்றார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ,
தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று சொல்ல முடியாது. தொழிற்சங்கம் என்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும். அண்மையில் துறைமுக தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையத்தை வழங்குவதை எதிர்த்தன. இதன் விளைவாக கிழக்கு முனையத்திற்கு பதிலாக அதனை விட பெரிய மேற்கு முனையம் வழங்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைவதாக இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அதனைன எதிர்க்கின்றன? குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் அது ஊழல் ஆகாது. தொழிற்சங்கங்கள் அதிக விலைக்கு சார்பாக இருந்தால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறது. தொழிற்சங்கங்கள் இந்த நாட்டு மக்களை இரண்டு நாட்களுக்கு இருட்டில் வைத்திருக்க முயல்கின்றன என்றால் அது எத்தகைய அநீதியான முடிவாகும். இதை அறிவுள்ள நாட்டு மக்கள் கவனமாக பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் மின்சார விலையை குறைக்கும் அரசின் திட்டம் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்..
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் முகங்கொத்துள்ள பசளை பிரச்சினை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
பசளை விவகாரத்தின் பின்னணியில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள்யார் என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
குருநாகல் உட்பட பல விவசாய மாவட்டங்களில் ஏற்கனவே விவசாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயம் ஆரம்பிக்கப்படாத மாவட்டங்களில் விவசாயம் செய்வதை தடுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும். பசளை பிரச்சினைக்கு இன்னும் சில நாட்களில் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்று இழப்பீடு வழங்குவதாக இருந்தால் போராட்டம் நடத்துவதில் அர்த்தமில்லை. இந்த எதிர்ப்பு அலைக்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிடுகிறார்கள். அப்பாவி மக்களை நெருக்க வேண்டாம் என எதிரணியை கோருகிறோம் என்றார்.
இறக்குமதி செய்யப்படும் நைட்ரிஜன் பசளை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் அமைச்சர் பதில் வழங்கினார்,
புதிதாக ஒன்றை பழக முயலும் போது இவ்வாறு பிரச்சினைகள் வருவது சகஜம்தான். அரசாங்கம் என்ற வகையில் நாம் இதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றோம். கோவிட் தொற்றுநோய் மற்றும் பசளை விவகாரத்தை தேர்தல் லாபம் பெறுவதற்காக பயன்படுத்த முயல வேண்டாம் என்று கட்சியினரைக் கோருகின்றன. பிரேமதாச இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தார். திஸாநாயக்க ஆறிலிருந்து மூன்றுக்கு கீழே சென்றதும் தேர்தலில் தான் என்றார் .
நிலத்திலுள்ள மண் இலங்கைக்கு சொந்தமானது அல்ல என ஜே.வி.பி எம்.பி.க்கள் கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
ஜே.வி.பி.க்கு இந்த மண்ணில் எதுவும் உரிமை இல்லை. அவர்கள் உண்டியல் ஆட்டி தேடி தமது கணக்குகளில் இட்டுள்ள சுமார் 7 பில்லியன் ரூபாய்கள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தம். நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன என்ற பொய்யை சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றனர். 71 மற்றும் 89 இல் இந்த நாட்டுக்கு செய்த அழிவுக்கு ஜே.வி.பி. பொறுப்புக் கூற வேண்டும். இந்த நாடு முன்னேறாமல் போனதற்கு எல்.ரீ.ரீ.ஈயும் , ஜே.வி.பியும் நாட்டுக்கு செய்த அழிவு தான் காரணம் என்றார்.
ஊடகப்பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mvzq3t
via Kalasam
Comments
Post a Comment