திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு
திங்கள் முதல், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், தமது பயணிகள் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை திட்டமிட்டுள்ளன.
அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.
தனியார் பஸ் சுகாதார விதிமுறைகளின்படி இயக்கப்படும் என்றும், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தங்கள் கடமைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் இருக்கை திறனுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நவம்பர் 1 முதல் 152 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்தார்.
பயணிகள் வசதிக்காகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அவர்களின் சமூக தூரத்தை பராமரிக்கவும் ரயில்வே திணைக்களம் அதிக ரயில்களை ஒதுக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்தில் சிரமங்களைத் தவிர்க்க, நேர அட்டவணையின்படி பொருத்தமான ரயில்களைத் தேர்ந்தெடுக்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3w2TAov
via Kalasam
Comments
Post a Comment