புத்தர் சிலைகளை உடைத்தோரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் விடுவிக்க மறுப்பதும், 18 பள்ளிவாசல்களை தாக்கிய 60 பேரை விடுவித்ததும் ஏன் - நீதிமன்றத்தை அதிரவைத்த கேள்வி


(எம்.எப்.எம்.பஸீர்)



சுமார் 3 வரு­டங்­க­ளாக அரச கைதில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­களை, பிணையில் விடு­வித்து நியா­ய­மான வழக்கு விசா­ரணை ஒன்­றுக்­கான சந்­தர்ப்பம் அளிக்­கப்­படல் வேண்டும் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் கேகாலை மேல் நீதி­மன்றில் வாதங்­களை முன் வைத்து கோரிக்கை விடுத்­துள்ளர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கின் விசா­ர­ணைகள் கடந்த வாரம் இடம்­பெற்ற போதே, 1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ராகி அவர் இந்த வாதத்தை முன் வைத்­துள்ளார்.

இது குறித்த வழக்கு, கடந்த வாரம், கேகாலை மேல் நீதி­மன்றில் நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­போதே அவர் இந்த வாதத்தை முன் வைத்தார்.

இதன்­போது வாதங்­களை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர்,

பல சந்­தர்ப்­பங்­களில், பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்கள் தொடர்­பு­பட்ட இதனை ஒத்த சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. எனினும் சிறு­பான்மை முஸ்­லிம்கள் தொடர்புபட்ட இந்த சம்­ப­வத்தை மட்டும், அதுவும் மேல் நீதி­மன்றின் மூன்று நீதி­ப­திகள் முன்­னி­லையில் , பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் எந்த அடிப்­ப­டையில் தேர்ந்­தெ­டுத்தார்?

பல சம்­ப­வங்கள் இருந்த போதும், நாம் மத வழி­பாட்டுத் தலங்கள் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் 44 சம்­ப­வங்கள் தொடர்­பி­லான வழக்கின் பட்­டி­ய­லொன்­றினை சமர்ப்­பித்­துள்ளோம்.

இவற்றில் 20 சம்­ப­வங்கள் 2018 ஆம் ஆண்டு நடந்­துள்­ளன. எனினும் 2018/12/26 இல் திதுல்­வத்த புத்தர் சிலை தகர்ப்பு தொடர்­பி­லான வெறுப்­பூட்டும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முன்னர் அவை இடம்­பெற்­றுள்­ளன. அந்த புத்தர் சிலை தகர்ப்பு நட­வ­டிக்­கைக்கு முன்னர் பதி­வான 20 சம்­ப­வங்­களில் 18 சம்­ப­வங்கள் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­த­லாகும். ஏனைய 2 இல் ஒன்று புத்தர் சிலை தகர்ப்பு சம்­ப­வமும், இந்து கோயில் ஒன்றின் மீதான தாக்­கு­த­லு­மாகும்.

பட்­டி­யலை பார்க்கும் போது முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் 18 மீதான தாக்­கு­தல்கள் தொடர்பில் 60 பெரும்­பா­ன்மை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்ள போதும், அவர்கள் இந்த வழக்கை போலல்­லாது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

அந்த பட்­டி­ய­லி­லேயே ஆரயும் போது 2019 மற்றும் 2020 ஆம் ஆண்­டு­களில் மத வழி­பாட்டு பொருட்கள் மற்றும் இடங்கள் மீதான தாக்­கு­தல்கள் 24 பதி­வா­கி­யுள்­ளன. எனினும் அவை குறித்த விசா­ர­ணைகள் எவையும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இடம்­பெ­றவோ, அச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தொடுக்­கப்­ப­டவோ இல்லை.

அதன்­படி இது அர­சி­ய­ல­மைப்பின் 12(1) மற்றும் 12 (2) ஆகிய உறுப்­பு­ரை­களின் கீழ் பாகு­பாடு, சட்­டத்தின் முன் சமத்­து­வ­மின்மை மற்றும் சட்­டத்தின் சம­மற்ற பாது­காப்பு தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கி­றது.. பிர­தி­வா­தி­களின் உரி­மை­களை மறுக்க அனு­ம­திக்க இந்த நீதி­மன்றம் உடன்­பட வேண்­டி­ய­தில்லை. அர­சி­ய­ல­மைப்பின் 4 ஆவது உறுப்­புரை ஊடாக இந்த நீதி­மன்றம் குடி­மக்­களின் உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க , பாது­காக்க மற்றும் அதனை தூண்ட பிணைந்­துள்­ளது.

இந்த பிர­தி­வா­திகள் 3 வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், ஒரு­வ­ருக்கு கூட சம்­ப­வத்தை நேரில் கண்­ட­தாக ஒரு சாட்சி கூட இல்லை. ‘ என வாதிட்டார்.

இதன்­போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட அரச சட்­ட­வாதி வசந்த பெரேரா, இது, பல நாட்­க­ளாக நாட்டின் பல பகு­தி­களில் சதி செய்­த­மை­யுடன் தொடர்­பு­பட்ட ஒரு வழக்கு எனவும் வழக்கு விசா­ர­ணைக்கு திகதி குறிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பிணை கோரிக்­கையை எதிர்ப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

இதன்­போது 3,4,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சஷிக பெரேரா குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் குற்­ற­வியல் சட்டக் கோவையின் விதி­வி­தா­னங்­க­ளுக்கு மாற்­ற­மா­னது என அடிப்­படை ஆட்­சே­பனை ஒன்­றி­னையும் இதன்­போது முன் வைத்தார். அதனால் இந்த குற்றப் பத்­தி­ரி­கையை முன் கொண்டு செல்ல முடி­யாது என அவர் வாதிட்டார்.

இந் நிலையில் இது தொடர்பில் நீதி­மன்றின் தீர்­மானம் எதிர்­வரும் 2022 பெப்­ர­வரி மாதம் 23 அம் திகதி அளிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டது.

வழக்குத் தொடுநர் சார்பில் இந்த வழக்கில், அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி வசந்த பெரேரா தலை­மையில், சட்­ட­வா­தி­க­ளான ஹரீந்ர ஜய­சிங்க, உதார கரு­ணா­தி­லக, சஜின் பண்­டார ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.சி.எம். முனீர், எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர்.

3,4,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி முபீ­னுடன் சட்­டத்­த­ரணி சஷிக பெரேரா ஆஜ­ரானார்.

15 ஆம் பிர­தி­வா­திக்­காக சட்­டத்­த­ரணி சம்பத் ஹேவா­பத்­தி­ர­ணவும் சட்­டத்­த­ரணி அவ்­தானும் ஆஜ­ரா­கினர். 9 ஆம் பிர­தி­வா­திக்கு சட்­டத்­த­ரணி துஷாரி வரா­பிட்­டி­ய­வுடன் சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன் ஆஜ­ரானார். 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி எம். இம்­தி­யா­சுடன் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரா­கினார்.

இத­னை­ய­டுத்து வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திக­தியும் மார்ச் மாதம் 2,10,22,31 ஆம் திக­தி­க­ளிலும் முன்­னெ­டுக்க நீதி­மன்றம் திகதி குறித்­தது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­காப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை, சமூ­கங்­கை­டையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர் மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­தியில் அதற்­கான வதி­விட கருத்த­ரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பய­ங்கர­வாத தடை சட்­டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மாகவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­க­ர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.



இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் இணைத்­துள்ளார்.



-Vidivelli


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3pvRwn9
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!