இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!



நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை ஆராய்ந்து, அதனை தம்வசம் வைத்துக்கொள்ளுமாறும், இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.

இதன் பின்னர், அந்த நாணயத்தாளை வழங்கிய நபர், அவரது வெளி தோற்றம், வாகனத்தில் வந்திருந்தால், அது பற்றிய விபரங்கள், நாணயத்தாளின் பெறுமதி, அதன் தொடர் இலக்கம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112422176 மற்றும் 0112326670 இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்களை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது அச்சிடுவது என்பன தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்ளை அச்சிடுதல் மற்றும் புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளது எனவும் அது சம்பந்ததமாக உன்னிப்பாக அவதானிக்குமாறும் பொலிஸ் மா அதிபர், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sCgZ0c
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!