இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்
(ஜெ.அனோஜன்)
இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிமான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி நேற்றைதினம் மேலும் 1,056 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகபடியான தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் மாறுபாடு இப்போது இலங்கையில் பெரும்பாலான கொவிட் தொற்றாள்கள் தோற்றுவிக்கும் முக்கிய மாறுபாடாக மாறி வருகிறது.
தற்சமயம் நாட்டில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 610,103 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 578,051 பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 16,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொவிட் பாதிப்பினால் 15,420 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
அதற்கு அமைவாக புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும் என்றும் எதிபார்க்கப்படுகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/XQ34UEK7R
via Kalasam
Comments
Post a Comment