க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடக்கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி நிபுணர்களாலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதற்கு முன்னர் இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/32EFwqU
via Kalasam
Comments
Post a Comment