விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியங்கள் பெப்ரவரி 28 முதல் விசாரணை






விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிய விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆரம்பமாகவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.


ஊழல் ஒழிப்பு குழு மற்றும் அதன் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, 1978 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் கடந்த 2021 ஜனவரி 28 ஆம் திகதி குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/narfYBw
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!