கொழும்பில் 23 வீடுகள் தீக்கிரை
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். (R)
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/IoQxFb0
via Kalasam
Comments
Post a Comment