பாட்டலியின் மனு விசாரணையின்றி தள்ளுபடி
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மீளாய்வு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.
இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் சாட்சியத்தை மறைத்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சாட்சி விசாரணையை கைவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதிகளான மேனகா விஜயசுந்தர மற்றும் எஸ்.குமாரரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KpR7fMV
via Kalasam
Comments
Post a Comment