இன்று ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 10.30க்கு நடைபெறவுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு இன்றைய நாளுக்கு பிற்போடப்பட்டது.
இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 பங்காளிக் கட்சிகளுள், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை கழகம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், நிரந்த தீர்வு குறித்து வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/R2ZLn4W
via Kalasam
Comments
Post a Comment