சர்வகட்சி மாநாட்டில் நல்லாட்சி அரசை விமர்சித்த அஜித் நிவாட் கப்ராலை கடுமையாக சாடிய ரணில்.


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்

நிவாட் கப்ரால் இன்று கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.


மாநாட்டில் உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது பழி சுமத்தியிருந்தார்.


கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாநாட்டில் அரசியல் பேசியதற்காக கப்ராலை கடுமையாக சாடினார்.


பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கவே இந்த மாநாடு கூட்டப்பட்டதாக கூறியுள்ள முன்னாள் பிரதமர், இது பழி விளையாடும் இடம் அல்ல என்றார்.


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், “முன்னாள் அரசாங்கத்தின் தவறுகளினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என தனது உரையை ஆரம்பித்துள்ளமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


“முன்னாள் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு தெரியும். அரசியல் வேறுபாடுகளுக்காக மீண்டும் ஒருமுறை சண்டையிட்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்காக நாங்கள் இன்று இங்கு வரவில்லை. நாங்கள் அரசியல் பேச்சுக்காக இங்கு வரவில்லை. இதைத் தொடர்ந்தால் இளவரசர் விஜயன் இலங்கை வருவதைப் பற்றிய விவாதத்தில் முடிந்துவிடும்.


அவர் இலங்கைக்கு வரவில்லையென்றால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது எனத் தோன்றுகிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Nw5B1qP
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!

திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!