ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் - பொலிஸ்மா அதிபர்.




பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ்மா அதிபர் நேற்றையதினம் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் கையளித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zLuoRwI
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

திருமணமாகி 18 நாட்களில் மரணமான சகோதரன் சுதாகர்...!! டெங்கின் கொடூரம்....!!

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம் மாணவன்!!