அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொலைவெறி தாக்குதல்.
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு
எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரின் கால் உடைந்துள்ளதுடன் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது,
“நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தாக்குவதற்காக மோட்டார் சைக்கிள்கள் சிலர் வருவதாக கூறினார்.. நாங்கள் குறுக்கு வீதியில் நுழைய முற்பட்ட போது எனது முதுகுப்பகுதிக்கு பொல்லால் ஒருவர் தாக்கினார்., பின்னர் நான் பைக்கில் இருந்து விழுந்தேன். அதுவரைதான் எனக்கு நினைவிருக்கிறது. .”
இதேவேளை, மகாவலி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் பதவி விலகுமாறு கோரி கிரித்தலையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நான்கு நாட்களாக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் பிரதிநிதிகள் நேற்றிரவு முடித்துக்கொண்டுள்ளனர்.
அந்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக விவசாய அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் விவசாய அதிகாரிகள் நேற்று விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்தனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mFxTwyk
via Kalasam
Comments
Post a Comment