IMF இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர் ரணில்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இயலுமானவரை செலவினத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வருடத்திற்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற எதிர்ப்பார்க்கின்றோம்.
அதேநேரம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளினதும் உதவிகள் பெறப்படவுள்ளன.
கிடைக்கப்பெறும் உதவிகளில், அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், நாட்டின் பணவீக்கமானது 40 சதவீதம் வரை அதிகரிக்கும்.
எவ்வாறாயினும், 2025ம் ஆண்டு வரை ஒரு சதவீத ஆரம்ப மிகை நிலுவையை அடைவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/c50ZfXq
via Kalasam
Comments
Post a Comment