8 தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில்


தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த 8 தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இடைநிலை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும் சுகாதார துறையினர் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலவுகிறது.

எனவே, இடைநிலை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணி என்ற அடிப்படையில் 8 தொழிற்றுறையினரின் இணக்கப்பாட்டுடன், இன்றும், நாளையும் கடமைக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், குடும்ப நல சேவை உத்தியோகத்தர், தொழிநுட்பவியலாளர்கள் சங்கம், ஈ.ஈ.ஜி அதிகாரிகள் சங்கம், பொது ஆய்வுக்கூட நிபுணர்கள் சங்கம், பல் சிகிச்சையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/pUwT0Kk
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?