எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தலைக்கவசமொன்றை தீ மூட்டி வீசிய சம்பவம்
தலைக்கவசமொன்றை தீ மூட்டி, அதனை எரிபொருள் நிலையத்தை நோக்கி வீசிய சம்பவமொன்று கந்தானையில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும், எரிபொருள் நிலைய ஊழியர்களும் விரைந்து செயற்பட்டு தலைக்கவசத்தில் இருந்த தீயை அணைத்தனர்.
இதனால், அங்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்ததன் பின்னர், மக்களுக்கு விநியோகிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/vEZlAq7
via Kalasam
Comments
Post a Comment