ஹிருனிக்காவின் மார்பகங்களை கிண்டல் செய்கின்றவர்களுக்கு அதிரடி பதில்.!

 

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்,அந்தவேளை போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முற்பட்ட போது வெளியில் தெரிந்த ஹிருணிக்காவின் மார்பகங்களை   வைத்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை சிலர் உருவாக்கி வருகின்றனர்.


அவ்வாறானவர்களுக்கு ஹிருணிக்கா தனது சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.....


 

"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!


அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன்.


நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். 


(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். 


எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"


- #ஹிருணிகாபிரேமச்சந்திர #HirunikaPremachandra



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NM2B4Xm
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!