பாராளுமன்ற உறுப்பினர்களுகாக எரிபொருள் கொடுப்பனவு 2 லட்சமாக அதிகரிப்பு ..
பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட ரூ. இரண்டு இலட்சம் வழங்கப்படவுள்ளது.
ஏனைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு இலட்சத்துக்கு மேல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
எரிபொருள் பிரச்சனையால், கொழும்புக்கு வெளியில் உள்ள பல எம்.பி.க்ளின் பாராளுமன்ற வருகை மிக குறைவாக இருப்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Kmaf8YD
via Kalasam
Comments
Post a Comment