ரஞ்சனுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும்
மனிதாபிமானம் கொண்ட, மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (30) பார்வையிட சென்ற பின்னரே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்பார்ப்பதாகவும், அந்நாள் வரும் வரை காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும் மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்த எதிர்கட்சித் தலைவர், ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீண்ட நேரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குள்ள பிரபலம் மிக்க ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர குடிமகனாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்ப்பதை ஒரே நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/tuBoYT8
via Kalasam
Comments
Post a Comment