எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான சகோதரி ஷமீம் பானு இக்பால் வபாத்.



தன்னம்பிக்கை கொண்ட ஒரு சகோதரி பானு இக்பால் காலமானார்....


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன் அனுபவப் பகிர்வுகளை நூலாகத் தொகுத்து விழிப்பூட்டல் செய்த சகோதரி பானு இக்பால் தொடக்கத்தில் நலம் பெற்றபோதும் பிறகு மிகுதியாக பாதிக்கப்பட்டிருந்தார்.


தன் இறுதி நாட்களில் தன் தாய் வீடான (பட்டாளத்தார் இல்லம்) புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் கணவர் இக்பால், மகன் பாசில், தாயார், தம்பி ஜியாவுல் ஹக் மற்றும் தம்பி மனைவியுடன் வசித்து வந்தார்.


இன்று பி.ப 2.00 மணிக்கு கரம்பக்குடி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.


குறுகிய காலத்தில் எழுத்துத்துறையில் பெரிய சாதனைகளை நிகழ்த்தியதுடன் சமூக செயற்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சகோதரி ஷமீம் பானு இக்பால் என்றென்றும்  நம் மனங்களில் நிறைந்திருப்பார். 


அன்னாரது மறுமை வாழ்வு ஈடேற்றமுள்ளதாக அமைவதற்கு வல்லவன் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்!


இக்பால் - 96565031575

தம்பி ஜியா - 9384409904



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Yi9B0qW
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?