மே 09 தாக்குதல்கள் – விசாரணைகள் நிறைவு
மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இவர்களுள் அடங்குகின்றனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதில் பாதுகாப்புப் படையினர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பது குறித்தும் இந்த குழு ஆராய்கின்றது. இந்த அறிக்கை மிக விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/m3WfbV5
via Kalasam
Comments
Post a Comment