கோழி முட்டை விற்ற 64 பேர் கைது
எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவற்றை கணக்கில் எடுக்காது, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி கடந்த 19ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டு, அன்று இரவில் இருந்தே அமுல்படுத்தப்பட்டது.
அதன்படி வெள்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு அல்லது கபில நிற முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நிர்ணய விலைக்கு மேல், முட்டைகளை விற்பனைச் செய்த, வர்த்தகர்களுக்கு எதிராகவே சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது.
/chat.whatsapp.com/FyPC9UcH70tBvVT4B8th3J
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/RqVWwTB
via Kalasam
Comments
Post a Comment