மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.
இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் https://ift.tt/zac6XsS என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.
இதேவேளை,இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மீள தோற்ற வேண்டுமெனில் எதிர்வரும் 1ஆம் திகதி 8ஆம் திகதி வரையில் ஒன்லைன் முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர்.
உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ln4z5JD
via Kalasam
Comments
Post a Comment