விலைகளை குறைத்தது சதொச
12 வகையான அத்தியாவசியv பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, நாட்டரிசி, பருப்பு, கடலை, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, வெள்ளைப்பூண்டு, நெத்தலி, காய்ந்த மிளகாய், உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனடிப்படையில் விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான ஒரு கிலோகிராம் (கி.கி) விலைகளின் விபரம்
01. உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் (1கி.கி) :- 180.00
02. சம்பா (1 கி.கி) :- 194.00
03. நாட்டரிசி (1 கி.கி) :- 198.00
04. பருப்பு (1 கி.கி) :- 460.00
05. கடலை (1 கி.கி) :- 485.00
06. வெள்ளை அரிசி (1 கி.கி) :- 185.00
07. வெள்ளை சீனி (1 கி.கி) :- 298.00
08. சிவப்பு சீனி (1 கி.கி) :- 310.00
09. வெள்ளைப்பூண்டு (1 கி.கி) :- 650.00
10. நெத்தலி (1 கி.கி) :- 1375.00
11. காய்ந்த மிளகாய் (1 கி.கி) :- 1690.00
12. உருளைகிழங்கு (1 கி.கி) :- 280.00
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/uXDBjcz
via Kalasam

Comments
Post a Comment