IMF பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(24) ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று(23) நாட்டை வந்தடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
எனினும், இதன்போது இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BCLkInE
via Kalasam
Comments
Post a Comment