இலங்கையில் கோதுமையை பயிரிட அரசாங்கம் முன்வந்தால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை
கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கோதுமை மா விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வந்துள்ளதால், கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கோதுமை மாவின் புதிய விலை தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகார சபையுடனான இந்த வார கலந்துரையாடலில், கோதுமை மா விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள், நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கோதுமை விதைகளை இறக்குமதி செய்து இலங்கையில் பயிரிட அரசாங்கம் முன்வந்தால், கோதுமை மாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என, சட்டத்தரணி டிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/38XW4VA
via Kalasam
Comments
Post a Comment