ஒரு நாள் பணிப்புறக்கணிப்பால் ரூ. 46 பில்லியன் இழப்பு-அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நாளாந்த வருமானமாக 46 பில்லியன் ரூபாவை இழக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தங்களால் கல்விக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாள் நாடு முற்றாக முடக்கப்பட்டால் நாட்டுக்கு 46 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் எனவும் அதற்காக சிலர் உழைத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 16,809 பில்லியன் ரூபா எனவும் அதனை 365 நாட்களால் வகுக்கும் போது நாளாந்த வருமானம் 46 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mfLN1Ak
via Kalasam

Comments
Post a Comment