ஹஜ் ஏற்பாடுகளுக்கு 105 முகவர்கள் நியமனம் : கட்டண விபரம் விரைவில் வெளியிடப்படும்
2023 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை தொடர்பான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 105 ஹஜ் பயண முகவர்களை உத்தியோபூர்வமாக நியமித்துள்ளது.
அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள ஹஜ் முகவர்களை மாத்திரம் ஹஜ் யாத்திரிகர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட 105 ஹஜ் பயண முகவர்களைத் தவிர ஏனைய ஹஜ் முகவர்களுக்கு கடவுச்சீட்டையோ ஹஜ் கட்டண முன் பணமோ வழங்கவேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுமதிக்கப்பட்டுள்ள ஹஜ் முகவர்களைத் தவிர ஏனைய முகவர்களுடன் மேற்கொள்ளப்படும் பதிவுகள், கட்டணங்களுக்கு திணைக்களம் பொறுப்புக்கூற மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள 105 ஹஜ் பயண முகவர்களின் பெயர் விபரங்களை திணைக்களத்தின் இணையத்தளம் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
இவ்வருடம் 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இதுவரை ஹஜ் யாத்திரைக்கு சுமார் 3000 பேரே விண்ணப்பித்துள்ளனர். எனவே ஹஜ் யாத்திரையை திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக திணைகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் வேண்டியுள்ளார்.
அத்தோடு 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தி ஹஜ் யாத்திரைக்கு பதிவு செய்து கொண்டுள்ளவர்கள் தங்களது பயணத்தை தாமதமின்றி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஹஜ் கட்டணம் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/aZoz9HG
via Kalasam
Comments
Post a Comment