🔴குருநாகலில் களஞ்சியசாலை ஒன்றில் 50,000 முட்டைகள் கண்டுபிடிப்பு
குருநாகல் ஹெட்டிபொல – கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
இன்று (29) முட்டை கொள்வனவு செய்யும் முகவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக அதிகார சபையின் அவசரச் சோதனைப் பிரிவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
கடையின் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/HJnw6zV
via Kalasam
Comments
Post a Comment