இன்று முதல் வழமைக்கு திரும்பும் பஸ், ரயில் சேவைகள்!
இன்று (17) முதல் இ.போ.சபை பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் வழமையான சேவைகளை முன்னெடுக்கும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று 4,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசேட வருட போக்குவரத்து சேவை திட்டம் நாளை வரை தொடரும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ரயில் இன்று வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/oNKl3CJ
via Kalasam
Comments
Post a Comment