வலபதத வவகரம - ரஷட பதயதனகக எதரன மன வசரண ஆகஸட 28 இல!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, கொண்டச்சி, முள்ளிக்குளம் மற்றும் அளக்கட்டு வனப்பகுதிகளை அழித்தமை தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு இன்று புதன்கிழமை (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
ரிஷாத் பதியுதீன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, பைசர் முஸ்தபா, சட்டத்தரணி ரிஸ்வான் ஆகியோர் நீதிமன்றில் பிரதிவாதி சார்பில் விவாதத்தை முன்வைத்து மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய ஆட்சேபனைகளை ஜூலை 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு உத்தரவிட்டது. மனுவை ஆகஸ்ட் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/k0CcXYF
via Kalasam
Comments
Post a Comment