யடயப பரதத தபபகக தயரதத இரவர கத
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த மாமாவும் மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீளமான வேறு ரக துப்பாக்கி, ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பதுரலிய சீலதொல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கடந்த அரகலயவின் போது, 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள், வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்து எரித்தனர் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேகநபர்களையும் மத்துக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/qPxMlYK
via Kalasam
Comments
Post a Comment