அரச தர பப நடளமனற உறபபனரகளகக வடககபபடடளள மககய அறவபப
அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை (26.06.2023) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.
⭕காரணம் என்ன...!
ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து எம்.பி.மாருக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
ஆனால், அதற்கான காரணம் குறித்து எம்.பி.மார்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்த பிரேரணையை அவசர மசோதாவாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை (01.07.2023) நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேட கூட்டம்
இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.
லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(25.06.2023) நாடு திரும்பிய பின்னர், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/N2ZD9fL
via Kalasam
Comments
Post a Comment