சரத அனமதபபததரம சலலபடயகம கலம இரணட வரடஙகளகக நடபப
சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.
அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் பாதுகாப்பு குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டன.
காலாவதியான தாற்காலிக உரிமத்தை புதுப்பிப்பதில் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.எனவே இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க திணைக்களம் முடிவு செய்துள்ளது,” என்றார்.
சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 800,000 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதில் திணைக்களம் நிலுவை வைத்துள்ளது. நாளாந்தம் 4,000 அட்டைகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/vn4B0Vd
via Kalasam
Comments
Post a Comment