சரவதச நணய நதயததன வககறதகள நறவறறய இலஙக
சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் 100 கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் 29ஐ இலங்கை பூர்த்தி செய்துள்ளது.
எனினும் இந்த ஆண்டு (2023) மே மாத இறுதியில் மூன்றில் இலங்கை தோல்வியடைந்துள்ளதாக வெரிடே ஆராய்ச்சியின் சர்வதேச நாணய நிதியத்தளம் தெரிவித்துள்ளது.
தோல்வியுற்ற இரண்டு பொறுப்புகள் வருவாய் தொடர்பானவையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1வீத வரி வருவாயை அதிகரிப்பது இதில் முதலாவது நிபந்தனையாகும்.
⭕புதிய மத்திய வங்கிச் சட்டம்
மே 30க்குள் வரி முன்மொழிவுக்கு ஏற்ப பந்தயம் உட்பட்ட வரி விகிதங்களை அதிகரிப்பது இரண்டாவது நிபந்தனையாகும்.
இணைத்தள நிதி வெளிப்படைத் தளத்தை நிறுவுதல் என்ற நிபந்தனை, மே மாத இறுதியில் ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்ட புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்ற மூன்றாவது நிபந்தனையை இன்னும் இலங்கை நிறைவேற்றவில்லை என்று வெரிடே ஆராய்ச்சியின் சர்வதேச நாணய நிதியத்தளம் தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/9MYAwD5
via Kalasam
Comments
Post a Comment