🔴நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கொஸ்லாந்தை, டயகம மற்றும் சுன்னாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சத்திய மூர்த்தி சிறிவிந்த் (21), வடிவேல் ஆனந்த குமார் (23) மற்றும் ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஷ்மன் (23) ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12.45 மணியளவில் நீராடச்சென்ற 3 பேரும் காணாமல்போயுள்ள நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர்களுடன் நீராடச் சென்ற மற்றுமொரு இளைஞன் இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/mbr1H3o
via Kalasam
Comments
Post a Comment