5 பதில் அமைச்சர்கள் நியமனம்!
இரண்டு நாட்களுக்கு மட்மே, ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வியாழக்கிழமை (20) மாலை செல்லவுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர் நாட்டுக்கு திரும்பும் வரையிலும் ஜனாதிபதியிடம் இருக்கும் அமைச்சுகளின் பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கையின் பதில் அமைச்சராகவும், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திரு.திலும் அமுனுகம முதலீடுகள் ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும் சமூக வலுவூட்டலுக்கான இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல், பெண்கள், சிறுவர்கள் விவகாரம் மற்றும் சமூக அதிகார பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/evNzwxq
via Kalasam

Comments
Post a Comment