லடரவ வட 700 ரபவறகம அதகமக வறகபபடம லஃப:வடததத பதய சரசச
சந்தையில் லிட்ரோ எரிவாயுக்கு இணையாக, லாஃப் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று(07.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
⭕அதிக விலை
மேலும் கூறுகையில்,12.5 கிலோகிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயு, 2,982 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 12.5 கிலோகிராம் லாஃப் எரிவாயு 3,690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனை விடவும், லாஃப் எரிவாயு கொள்கலனின் விலை 708 ரூபாயினால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலை முரண்பாடு நுகர்வோருக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/QYs4BoT
via Kalasam
Comments
Post a Comment