🔴ரணிலும், சஜித்தும் இணைந்தால் நல்லது என நாம் விரும்புகிறோம் - மக்களும் விரும்புகிறார்கள்.


தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாசவுடன் கரங்கோர்த்து இருக்க காரணங்கள் இவைதான்


த.மு.கூ தலைவர் மனோ கணேசன் எம்.பி


நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை நாடெங்கும் பரந்து வாழும், பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டி வாழவும், பயிர் செய்கை வாழ்வாதாரத்துக்கும் காணி வழங்கி, அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்கும் எமது கொள்கையை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.


அதேபோல், கொழும்பு மாநகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மனைகளை கட்டி சொந்தவீடுகள் வழங்கவும் சஜித் பிரேமதாச எம்முடன் ஒரு கட்சியாக, தேசிய கூட்டணியாக உடன்பாடு கண்டுள்ளார்.


தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில், பிரதான பங்காளி கட்சியாக அங்கம் வகிக்க பிரதான காரணங்களில் இது ஒன்றாகும், எதிர்கட்சி தலைவர் பிரேமதாச, இவை தொடர்பில் எமக்கு எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் உறுதிகள் அளித்துள்ளார். பகிரங்கமாக மேடைகளில் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் அதை இன்று மீண்டும் கூறி உறுதி செய்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.


இன்றைய பாராளுமன்ற அமர்வில் எதிர்கட்சி தலைவர் பிரேமதாசவின் உரை தொடர்பில் மேலும் தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;


மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின், பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை, குருநாகலை, காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் அமைந்துள்ள 102 பிரதேச செயலக பிரிவுகளில் பெருந்தோட்ட துறை அமைந்துள்ளது. எங்கெல்லாம் எம்மவர் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் காணி உரிமையும், வீட்டு உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


அதேபோல், தொழில், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஆகிய காரணங்களை தேடி பெருந்தொகையான நமது மக்கள் மலைநாட்டு பிரதேசங்களில் இருந்தும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்தும் தேசிய தலைநகரம் கொழும்பு மாநகரில் வந்தும் குடியேறுகிறார்கள். இங்கேயே பிறந்து வளர்ந்து வாழும் மக்களும் இருக்கின்றார்கள். அனைவருக்கும் கல்வி, வீடு, வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்து, பாதுகாப்பு அளிக்க நான் இங்கே இருக்கிறேன்.


ரணிலும், சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புகிறார்கள். நாமும் விரும்புகிறோம். ஆனால், அது எமது கைகளில் மாத்திரம் இல்லை. பல புற சக்திகள் அதற்கு தடையாக இருக்கின்றன. அதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.


எமது பிரதான நோக்கு, எமது மக்களின் விடிவுக்கு நிரந்தர தீர்வுகளான காணி உரிமையும், வீட்டு உரிமையும், கல்வி உரிமையும் உறுதிப்படுத்தப்படுவதாகும். கல்வி உரிமைக்கு இந்திய அரசு உதவும் என நான் நம்புகிறேன். காணி உரிமையை, நாம் இலங்கையில் பெறுவோம். இவற்றை எப்படி பெறுவது என்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்க்கதரிசனத்துடன் நடக்கின்றது. நாம் நினைத்தால், உடன் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறலாம். ஆனால் அதைவிட இதுவே எமது நிதானமான தீர்க்கதரிசன நோக்கு என்பதை நான் பொறுப்புடன் கட்சி தலைவராக கூறி வைக்க விரும்புகிறேன்



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UPDWybA
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!