இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் நடுவராக ஒலுவில் சியான் தெரிவு

 


(மு.அ.மு.சிஹாம்)


கடந்த ஏப்ரல் மாதம் 08 ம் திகதி ஏறாவூர் மீரா பாலிகா பாடசாலையில் நடைபெற்ற சுமார் 10 #வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறக்கூடிய ; இலங்கை #கிரிக்கெட் நடுவர் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற நடுவர்களுக்கான பரீட்சையில் நடுவர் குழாம் தரம் - 5 க்கு ஒலுவில் சரிபுடீன் சியான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


வெட்டுப்புள்ளி 70 க்கு மேல் பெற வேண்டிய, இப் பரீட்சையில் 83.5 புள்ளிகள் பெற்று இவர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் இவர் பிரபல ஒலுவில் #இலவன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரும், இலங்கை  #உதைபந்தாட்ட சம்மேளனத்தின்  மத்தியஸ்தரும் மற்றும் மாவட்ட உதைபந்தாட்ட  அணி கோல் காப்பாளருமாவார்.


பிராந்தியத்தில் விளையாட்டு மற்றும் அறிவிப்புத்துறையில் பல தடைகளை கடந்து தன் முயற்சியால் தனக்கென ஒரு இடத்தை பெற்ற ஒரு  ஆளுமையாகவும் திகழ்கின்றார். 


 அறிவிப்பாளருமான ; குறிப்பாக கிரிக்கெட் வர்ணனையில் பிரபலமான சரிபுடீன் சியான் அவர்களுக்கு 


வாழ்த்துகளும் பிராத்தனைகளும்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/CuHLmFE
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!