🔴அங்குருவாதொட்ட இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது
அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும்,அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
⭕முந்திய செய்தி
அங்குருவாதொட்ட, உருதுதாவ பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.
அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/k6Z0IPe
via Kalasam
Comments
Post a Comment