ஹக்கீம் + ஹிஸ்புழ்ழாஹ் + அலி ஸாஹிர் - கிழக்கின் ஆளுநர் செந்திலுடன் அவசர சந்திப்பு.

  




(ஊடகப்பிரிவு)   

கிழக்கு மாகாணத்தில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் மற்றும் தற்போது எழுந்துள்ள ஏறாவூர் நகர சபைப்பிரிவில் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் காணிப்பிரைச்சினைகள் தொடர்பிலான அவசர சந்திப்பொன்று கொழும்பில் உள்ள ஆளுநரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.      

இச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

இதன் போது கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கு மத்தியில் ஏற்படும் முரண்பாடுகளை சுமூகமான வகையில் தீர்த்துக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டதுடன் தேவை ஏற்படின் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி எந்த வகையிலும் பொது மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bvVJM0o
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?