Posts

Showing posts from August, 2023

🔴நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது.

Image
நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சார சபை தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்திக்கு போதுமான நீர் இல்லாமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/29sgwWR via Kalasam

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

Image
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கான் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தனது அரசை கவிழ்த்ததில் அமெரிக்காவின் சதி இருந்ததாக கடந்த ஆண்டு இம்ரான் கான் குற்றச்சாட்டினார். இதை அமெரிக்காவும், பாகிஸ்தான் இராணுவமும் மறுத்தன.  இதற்கிடையே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் அனுப்பிய இரகசிய தகவலை இம்ரான் கான் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது.  இது தொடர்பாக இம்ரான்கானுக்கு எதிராக குற்றவியல் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும், புதிய வழக்கில் அவர் மற்றும் மூன்று உதவியாளர்களின் பெயர்கள் பதிவு செய்துள்ளதாகவும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.  உத்தியோகபூர்வ இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இம்ரான் கான் மீது குற்றச்சாட்டியதற்காக நீதிமன்ற வழக்கு தொடர ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTI

பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் இல்லை!

Image
  பல்கலைக்கழகங்களில் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதுடன் ஆசிரியர் பற்றாக்குறை 50 வீதத்தை நெருங்கியுள்ளதாக பேராசிரியர் பரண ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 11,900 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6,000 இற்கும் குறைவானவர்கள் தான் இருக்கின்றார்கள். இந்நிலையால் பல்கலைக்கழக செயற்பாடுகளை தடையின்றி நடாத்தி செல்வதற்கு விரிவுரையாளர்கள் பாரிய பணிச்சுமைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜெயவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக அமைப்பினுள் பணிபுரிந்த விரிவுரையாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் ஜனவரி மாதமளவில் 6,300 ஆகக் குறைந்ததுடன் கடந்த 7 மாதங்களில் மேலும் 500 தொடக்கம் 600 வரையிலான விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார். விரிவுரையாளர்களின் வெளியேற்றத்தால் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே பாதிக்கப்படுகிறது என்ற பொதுவான எண்ணத்தில் உண்மையில்லை. தனியார் பல்கலைக்கழகங்களும் இதனால் சமனான பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஏனெனில் நாட்டின் தலைசிறந்த

லேடி ரிட்ஜ்வேயில் மற்றுமொரு குழந்தை மரணம்!

Image
  கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்று மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னர் நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அவிசாவளை எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எட்டு மாத வயதுடைய டெஷான் விதுநெத் என்ற சிசு சுகயீனம் காரணமாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு டெஷான் மாற்றப்பட்டார். குழந்தைக்கு நோய் இருப்பதை உறுதி செய்யாமல் யூகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்போது கொடுக்கப்பட்ட வலிப்பு எதிர்ப்பு மருந்து காரணமாக சிசுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை டெஷான் கடந்த 19ம் திகதி உயிரிழந்தார். சிசுவின் உடல் நேற்று பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்தத

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் காலவரையறையின்றி செல்லுபடியாகும்!

Image
  இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் அனைத்துப் பிரதிகளுக்கும் இனி செல்லுபடியாகும் காலம் கவனத்திற் கொள்ளப்படாது என பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள், செல்லுபடியாகக் கூடிய கால வரையறையின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிக்கையொன்றை வெளியிட்டு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. ஆவணங்கள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் என்ற முந்தைய தேவைப்பாட்டைத் திருத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு, வெளியுறவுத்துறையமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழில் மாற்றங்கள் தேவைப்பட்டால் மட்டுமே உரிய ஆவணங்களின் புதிய பிரதிகளைப் பெறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறந்த மற்றும் தெளிவான பிறப்பு , இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் புதிய பிரதிகளைப் பெறத் தேவையில்லையென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTI

ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு பரீட்சை எழுத அனுமதி மறுப்பு!

Image
  இந்தியா, திருவண்ணாமலை அருகே நடைபெற்ற இந்தி தேர்வில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இந்தி பிரச்சார சபா சார்பில் தமிழகத்தில் இந்தி தேர்வு நேற்று நடைபெற்றது. பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா ஆகிய முதல் 3 நிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெண்கள் தேர்வு எழுத வந்தனர். அவர்களிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என தேர்வு மைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முஸ்லிம் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டவர்கள், ஹிஜாப்பை அகற்றிவிட்டு, தேர்வு எழுதினர். அதேநேரத்தில் மத்யமா தேர்வு எழுத வந்திருந்த பெண் ஷாபனா, ஹிஜாப்பை அகற்ற மறுத்ததால், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர், தேர்வு மையத்தில் இருந்து வெளியேறினார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/8p0BdzA via Kalasam

ஏறாவூர் படுகொலைகளின் வரலாறு - நூல் வெளியீடு!

Image
  1990ஆம் ஆண்டு ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நூல் ஏறாவூர் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையினால்  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொது முiகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கடந்த வெள்ளியன்று 18.08.2023 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூல் விமர்சன ஆய்வுரையை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தினார். ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, நிருவாக அலுவலர் ஜாஹிதா உட்பட காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களின் ஊர்ப் பிரமுகர்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உற்றார் உறவினர்கள், தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் செயற்பாட்டாளர்கள், மார்க்கப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி நடுநிசிக்குச் சற்று முன்னராக ஏறாவூருக்குள் புகுந்த ஆயுதக் கும்பலால் ஆற்றங்கரை, சுரட்டையன்க

"வேற்றுமையில் ஒற்றுமை" சிநேகபூர்வமான சந்திப்பு!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை அமைப்பாளரும், முன்னாள் கல்முனை மாநகர உறுப்பினருமான ஜனாப் எம்.ஐ.எம் அப்துல் மனாப் அவர்களின் ஏற்பாட்டில் திடீர் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கௌரவ தலைவரும், முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களுடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்  கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு, கல்முனை கிளை காரியாலயத்தில் நேற்று நண்பகல் (20) இடம்பெற்றது. இச் சந்திப்பில் எமது காரியாலயம் இங்கு அமையப்பெற்ற நோக்கத்தையும்,  எமது ஜம்இய்யத்துல் உலமாவின் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஜம்இய்யாவின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/xkM3WI6 via Kalasam

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்த ரணில்!

Image
  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி  ஹலிமா யாக்கோப் அவர்களை சற்று  முன்னர் சிங்கப்பூரில் சந்தித்தார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமாகினர். இன்று (21)அதிகாலை, சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ 469 என்ற விமானம் மூலம்இன்று அதிகாலை 12.30க்கு சிங்கப்பூரின் சென்டு விமான நிலையம் நோக்கி பயணித்ததாக தெரியவந்துள்ளது. குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புக்கான சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்த்தன, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்களுக்கான விசேட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க உள்ளிட்ட 10 தூதுக் குழுவினர் பயணித்ததாக அவர் குறிப்பிட்டார். குறித்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் , சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் , நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் ஆகியோருடன் இருதரப்பு கலந

பெரியதாய் ஒன்றும் வேண்டாம்.

Image
  பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் வேண்டாம், பழி சொல்லாமல் இருந்தாலே போதும். பூமாலை இட்டு புகழ்ச்சிகள் வேண்டாம், புண்படுத்தாமல் இருந்தாலே போதும். புதுப்புது ஆச்சரியங்கள் வேண்டாம், பொய்ப்பிக்காமல் இருந்தாலே போதும். ஆசை வார்த்தைகள் வேண்டாம், அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும். உயர்வான மதிப்புக்கள் வேண்டாம், உதாசீனப்படுத்தாமல் இருந்தாலே போதும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டாம், எதிர்க்காமல் இருந்தாலே போதும். எண்ணங்களில் அற்புதங்கள் வேண்டாம், ஏமாற்றாமல் இருந்தாலே போதும். எப்போதும் பரிசில்கள் வேண்டாம், ஏளனப்படுத்தாமல் இருந்தாலே போதும். நிரந்தரமான மகிழ்ச்சிகள் வேண்டாம், நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதும். காலமெல்லாம் தாங்க வேண்டாம்,  காயப்படுத்தாமல் இருந்தாலே போதும். கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம், கலங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும். கஷ்டங்களை சுமக்க வேண்டாம், கவலை தராமல் இருந்தாலே போதும். கனவுகளை கரை சேர்க்க வேண்டாம், கலைக்காமல் இருந்தாலே போதும். #பெரியதாக_ஒன்றும்_வேண்டாம் #உண்மையாக_இருந்தாலே_போதும். ✒️ புஷ்ரா அஷ்ரப்f from Ceylon Muslim - NEWS CASTI

🔴ஊதியமில்லாத வெளிநாட்டு விடுமுறை வழங்குவது நிறுத்தப்படும்

Image
  நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதித்துறை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவை தேவைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/kn9Jh72 via Kalasam

மற்ற இமாம்களுக்குக் கிடைக்காத, ஒரு சிறப்பு இந்த இமாமிற்கு

Image
அஷ்ஷைக் அப்துல்லாஹ் அவாத் அல்ஜுஹனி ஹபிழஹுல்லாஹ் மக்கா ஹரம் ஷரீபின் 9 இமாம்களில் ஒருவர். 47 வயதாகும் இந்த இமாமிற்கு மற்ற இமாம்களுக்குக் கிடைக்காத ஒரு சிறப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. அது நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றில் இடம்பெற்ற 4 மஸ்ஜித்களில் இமாமாகப் பணியாற்றும் நல்வாய்ப்பு. குர்ஆன் ஆய்வு துறையில் BA பட்டமும், பின் Ph.d பட்டமும் பெற்றவர். முதலில் மஸ்ஜித்கிப்லதைனிலும், பின் மஸ்ஜித் நபவியிலும், பின் மஸ்ஜித் குபாவிலும் இமாமாகப் பணியாற்றினார். பின் 2007ஆண்டு முதல் மஸ்ஜித் ஹராமில் இமாமாகப் பணியாற்றி வருகிறார். - Ismail Najee - from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/jNEDxto via Kalasam

மற்றுமொரு குழந்தை மரணம் - பெற்றோரும், வைத்தியசாலையும் கூறும் இருவேறு காரணங்கள்

Image
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தெனுஜ சஸ்மிர நாணயக்கார என்ற சிறுவன், கடந்த 9ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 6 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் குணமடையவில்லை. அவரது நோயைக் கண்டறிய முடியவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரை ஒரு இயந்திரத்துடன் இணைக்க முயன்றுள்ளனர், ஆனால் சுயநினைவு திரும்பாத தெனுஜ, துரதிர்ஷ்டவசமாக தீவிர சிக

🔴A/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Image
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/lyTFtXH via Kalasam

🔴சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் !

Image
  சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்வதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். அதிக வெப்பத்துடனான காலநிலை தொடரும் போது, ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உளநலம் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். மருந்துகளை உட்கொள்வோர் இவ்வாறான அதிக வெப்பத்துடனான காலப்பகுதியில் அதிகளவு நீரை பருகுவது அத்தியாவசியமாகும். உடலில் நீரின் அளவு குறையுமிடத்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் எனவே, அனைத்து தரப்பினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது கட்டாயமானதென அவர் வலியுறுத்தியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/5cNpIjm via Kalasam

🔴30,000 தாதியர்களுக்கு வெற்றிடம்

Image
தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களாக உயர் மட்ட தாதியர்கள் பயிற்சிக்கு உள்வாங்கப்படவில்லை என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/rls2KcG via Kalasam

🔴தங்க திரவத்துடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன்

Image
சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன், இந்தியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக இலங்கைச் சுங்கத்தின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மும்பை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர், சந்தேகத்தின் பேரில், எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, ஒரு கிலோ 280 கிராம் எடையுள்ள இந்த தங்க திரவத்தை அவரது உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/iu6Dt50 via Kalasam

🔴சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

Image
சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி, கல்வி முறையில் 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊழியர்கள் 5 வருட காலம் விடுமுறை பெற்று உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலைக்குச் செல்லலாம் என அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்ததாகவும் இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில், மூளையில்லா அரசாங்கத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பது பிரச்சினை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/sQgB1ZO via Kalasam

ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

Image
  இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அலட்சியத்துடன் பழையபடி அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சேவையின் நிமித்தம் காரணமாக சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு உபரி ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BbqGTCk via Kalasam

மதுபானம் அருந்துவிட்டு – பாடசாலைக்கு வந்த மாணவி.

Image
பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு முன்பாக பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த மாணவி மீது சந்தேகம் அடைந்து மாணவியை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். பின்னர், குறித்த மாணவி கெக்கிராவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஓ.பி.சுமித் முனசிங்கவிடம் அழைத்து வந்து ஒப்படைத்த பின்னர், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி எப்படி மது அருந்தினார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனின் தந்தை தனக்கு பியர் குடிக்க கற்றுக் கொடுத்ததாக சிறுமி கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பொலிஸார், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு?

Image
  இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கோதுமை மா இறக்குமதிக்கு உரிமம் தேவை எனக் கூறி, கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இடைநிறுத்தியுள்ளதாகவும், இதனால் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலைமையினால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/HaRdo7v via Kalasam

சட்டவிரோதமான செயற்படும் அனைத்து இன மக்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பேன் : சாணக்கியன்!

Image
  சட்டவிரோதமாக யார் செயற்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  சட்டவிரோதமாக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே எனது நிலைப்பாடு. அதிலும் அரசியல் செல்வாக்குடன் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. உதாரணமாக மகாவலி அபிவிருத்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைகளில் அண்மையில் கோப் குழுவில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. இரவோடிரவாக ஒரு பிரதேசத்தில் இவ்வாறான காணி அபகரிப்புச் செயற்பாடுகளை சாதாரண மக்களால் முன்னெடுக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம். ஆனால் சில அரசியல் பின்புலத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக நான் இனிமேல் இவ்வாறான விடயங்களுக்கெதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அதில் எந்த பாரபட்சத்திற்கும் இடமில்லை. அது தம

டிக்டாக் பயன்படுத்த தடை!

Image
  சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் நிறுவனம் சீனாவை சேர்ந்தது. டிக்டாக் செயலி மூலம் தரவுகளை திருடுவதாகவும், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சீன அரசு மீது பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் டிக்டாக் செயலி நிறுவனம் மற்றும் சீன அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தன. என்றாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்கா கடந்த 2022-ல் சில விதிவிலக்குடன் டிக்டாக் செயலியை அரசு சாதனங்களில் பயன்படுத்த தடைவிதித்தது. இந் நிலையில் நியூயோர்க் மாநில நிர்வாகம் அரசு சாதனங்களில் டிக்டாக் செயலியை முற்றிலும் பயன்படுத்த தடைவிதித்துள்ளது. பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/7iLJ9sG via Kalasam

🔴பாராளுமன்ற அறையில் இருந்து இரண்டு தலையணைகள் மற்றும் ஒரு மெத்தை

Image
  நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாகவும், அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படும் என்றும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்ற பிரதிநிதி ஒருவர் பாராளுமன்ற வளாகத்தின் குழு அறைகளை ஆய்வு செய்த போது இந்த இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை கண்டுபிடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் கட்டட பராமரிப்பு திணைக்களத்தில் சில அழகான இளம் பெண் பணியாளர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் குழுவொன்று குற்றம் சாட்டப்பட்டது, அதன் விளைவாக குழு அறைகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன. இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பெண் ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 20 பேரின் வாக்குமூலங்களை குழு ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் அதிகாரிகள் குழுவொன்று இரகசியமாக செயற்பட்டு வருவதாகவும், அது தொடர்

🔴இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நீல நிற மாணிக்கக்கல் இன்று 43 கோடி ரூபாவுக்கு (இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலை) விற்பனையானது.

Image
கஹவத்தை – கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல நிற மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இது இன்று (16) இடம்பெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இது ‘நீல மாணிக்க’ வகை இரத்தினக்கல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 99 கரட் என்பதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் கஹவத்த பிரதேசத்தில் இந்த விலைமதிப்பற்ற நீலக்கல் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் கஹவத்தை நகருக்கு அண்மித்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் கற்கள் தோண்டிய போது இந்த பெறுமதியான நீல மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/HpBJe3Y via Kalasam

🔴மீன்களின் விலை வீழ்ச்சி !

Image
சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார். இதற்கமைய லின்னோ மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவுக்கும், பலயா 700 ரூபாவுக்கும், கணவாய்  700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வாரம் கெலவல்ல மீன் 2200 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/0IlMRCB via Kalasam

சமூகப்பற்றுள்ள ஒருவரே சகோதரர் ஜின்னா காரியப்பர் அவர்கள்

Image
  கல்முனை மண்ணிலிருந்து உருவான மூத்த தலைவர்களில் முதன்மையான முன்னாள் அமைச்சர் கேட்முதலியார் மர்ஹூம் MS.காரியப்பரின் சிரேஸ்ட புதல்வர் பிரபலமான சமூக செயற்பாட்டாளர் அல்ஹாஜ் ஜின்னா காரியப்பர் அவர்கள் இன்று காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர்ராஜியூன்) எனும் செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன். கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியுமான சகோதரர் அர்சத் காரியப்பரின் தந்தையான அன்னாரை அண்மையில் சகோதரர் அர்சத் காரியப்பரின் வீட்டில் சந்தித்து சுகம் விசாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வயதிலும் முஸ்லிம் சமூகம் தொடர்பிலும், கல்முனை மண் தொடர்பிலும் அவர் கொண்டுள்ள பற்று என்னை ஆச்சரியப்படுத்தியது. மிக நீண்ட தூரநோக்கு கொண்ட பல ஆலோசனைகளை எனக்கு வழங்கிய அவரின் மரண செய்தி என்னுள் ஆழ்ந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது. அவரின் இழப்பினால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்து கொண்டு காலமான என் நெஞ்சுக்கு நெருக்கமான இந்த சகோதரனின் நல்லமல்களை பொருந்திக்கொண்டு பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உய

9 பொருட்களின் விலை, நாளை குறைப்பு (முழு விபரம் இணைப்பு)

Image
ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (17.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Yr9qxBP via Kalasam

🔴இலங்கை நிதியமைச்சின் கட்டடத்தில் தீப்பரவல்

Image
கொழும்பிலுள்ள நிதியமைச்சின் கட்டடத்தில் தீப்பரவலொன்று பதிவானது. கட்டடத்தின் 2ஆம் மாடியில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். தீயைக் கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு படை தீ மேலும் பரவாமல் தடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.  தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NlBz9bY via Kalasam

🔴பெரமுனவை பிளவுப்படுத்தும் ரணிலின் காய்நகர்த்தல்கள்! பசிலுக்கு வலுக்கும் ஆதரவு

Image
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது அடிப்படையற்றது. விலகிச் சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபக்சர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அரசியலில் நாங்கள் தனித்து சிறந்த முறையில் செயற்படுகிறோம். ⭕ஜனாதிபதியின் செயற்பாடு  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன

வவுனியாவில் 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

Image
  வவுனியா தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடந்த பூஜை ஏல விற்பனையில் மாம்பழம் ஒன்று 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக ஆலயத்தின் நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர், இந்த ஏல விற்பனையில் மாம்பழத்தை கொள்வனவு செய்துள்ளார். ஆடி மாதத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் ஆலயங்களில் தற்போது வருடாந்த திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதன் போது ஏல விற்பனைகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னர் வவுனியா மாவட்டத்தில் பூஜை தட்டு ஒன்று 10 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/RdTEym9 via Kalasam

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன -கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்.

Image
நூருல் ஹுதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. ஹலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் முகத்திரை கிழிந்து அவரின் சொந்த முகம் இந்த நாவலடி விடயத்தில் அப்பட்டமாக வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து பீ 2பீ பயணம் சென்ற முஸ்லிங்களின் மூத்த அரசியல்தலைவர்கள் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அன்றும் சொன்னோம் இன்றும் சொல்கிறோம் முஸ்லிம் அரசியலின் வீரியத்தை குறைத்து தங்களின் எண்ணங்களை நிறைவேற்ற இவர்கள் நாடகம் நடிக்கிறார்கள் என்று. வீழ்ச்சி பாதையில் முஸ்லி

🔴அநுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை தொடர்பிலான அறிக்கை இன்று

Image
  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின்போது கீழே விழுந்து குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான உள்ளக விசாரணை அறிக்கை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. ரம்பேவ – கல்லஞ்சிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 10 திகதி பிரசவித்த குழந்தையொன்றை கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குழந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தது.  மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை தரையில் வீழ்ந்து உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது தொடர்பான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/BQmGl5k via Kalasam

🔴வறண்ட காலநிலையால் நீர் விநியோகத்தில் தடை

Image
இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே தண்ணீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மலையகத்தில் உள்ள நீர் பாவனையாளர்களுக்கு நீர் விநியோகம் செய்வதில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படக்கூடும் என சபை விசேட அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு வருந்துவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளதுடன், இந்த நேரத்தில் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரை கோரியுள்ளது. இதேவேளை, வாகனங்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற அத்தியாவசிய தேவையற்ற நடவடிக்கைகளுக்கு நீர் பாவனையை குறைத்து, அன்றாட நடவடிக்கைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும் சபை கோரியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA htt

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ் : முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு.

Image
  நூருல் ஹுதா உமர்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடனான சந்திப்பு  ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை பள்ளி வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்முனை மக்கள் எதிர்நோக்கும் சமூக, சமய, கலாச்சார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும் கல்முனையின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது கல்முனையின் வளர்ச்சிக்காக அனைத்து தரப்பினர்களும் கருத்து வேறுபாடுகளை தவிர்ந்து ஒன்றினையும் அவசியத்தை வலியுறுத்தியும், போதைவஸ்து பாவனையினால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் பின்னடைவுகள், சமூக கலாச்சார ஒழுக்க விழுமியங்களின் சீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி தக்க தீர்வை பெற்றுத்தருவதாகவும், அகில இலங்கை ஜம்இ

🔴சுகாதார அமைச்சருக்கு வலுக்கும் எதிர்ப்பு: சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள மனு

Image
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகக் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நிகழ்வு நாவலப்பிட்டியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இந்நிகழ்வு இன்று (13.08.2023) நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமகி ஜன பலவேகவினால் (SJB) நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த கையெழுத்து சேகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது ⭕சபாநாயகரிடம் மனு சுமார் 10 ஆயிரம் கையெழுத்துகளுடன் கூடிய இந்த மனு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/OEiYANt via Kalasam

முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதி அக்கறை கொள்ள வேண்டும் - மகஜர் கையளிப்பு

Image
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டோரை நினைவு கூரும் வருடாந்த பிரார்த்தனை நிகழ்வு சனிக்கிழமை 12.08.2023 இடம்பெற்றது. தெருக்களில் வெள்ளை கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததோடு அன்றைய தினம் கடைகள் பூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் காட்டுப்பள்ளிவாசலில் அதிகாலை தொடக்கம் பிரார்த்தனை நிகழ்வுகளைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இறுதியில் கவன ஈர்ப்பு அமைதிப் பேரணி இடமட்பெற்றது. தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொதுமுகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, அகில இலங்கை வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய உப தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை உட்பட ஊர்ப் பிரமுகர்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உற்றார் உறவினர்கள், தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் செயற்பாட்டாரள்கள், மார்க்கப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர கலந்து கொண்டனர். ஏறாவூர் நகரிலும் அதனை அண்டியுள்ள கிராமங்களிலும் நித்திரையிலிருந்தபோது பச்சிளம

🔴ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் வெளியேறல்

Image
  ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபேசேகர இன்று அத தெரணவிடம் தெரிவித்தார். இதன் காரணமாக சாதாரண சத்திரசிகிச்சைகளை தவிர்த்து ஏனைய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் வைத்தியசாலை நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர் கல்விக்காக நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது நிரந்தர வதிவிடத்திற்காக சென்றாரா என வினவிய போது, ​​தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என பணிப்பாளர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அவசர சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாகவும், வழமையான சத்திரசிகிச்சைகள் நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/UCKazNB via Kalasam

🔴நாட்டில் மனநல வைத்திய நிபுணர்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தது.

Image
  பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காலி, கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். அதேபோன்று, சிகிச்சைக்காக வரும் அவ்வாறான நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/gKxyzJu via Kalasam

ஸ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

Image
  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து வழக்கு ஒன்றின் சாட்சியாளரை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் ஸ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, கடந்த மார்ச் 17 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர்  கைது செய்யப்பட்டிருந்தார். சாட்சியத்தை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் ஜே. ஸ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/74Yg0fr via Kalasam

22 வயது மருத்துவபீட மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன்

Image
மருத்துவ பீட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது பாடசாலை மாணவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், ஜாஎல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய மருத்துவ மாணவியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1avrFDb via Kalasam

🔴வீதியில் சடலமாக கிடந்த இளைஞன்! உடலில் காணப்படும் காயங்களால் எழுந்துள்ள சந்தேகம்

Image
பதுளை - மஹியங்கனை பகுதியில் உள்ள வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (12.08.2023) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுலுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நந்தன குமார என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ⭕மரணத்திற்கான காரணம் இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/RkzDt0g via Kalasam

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பரில் விவாதம்!

Image
  சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் முதல் வாரத்தில் விவாதிக்கப்படும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அறிவித்தார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/P69M5co via Kalasam

🔴மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடாத்த சவூதி அனுமதி

Image
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளைச் சேர்ந்த 150 புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், மதத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கேற்கவுள்ளர். இஸ்லாமிய நாடுகள், சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பல சர்வதேச பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்களும் இரண்டு நாட்கள் தொடராக கொண்ட இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். “உலகில் உள்ள மத விவகார திணைக்களங்கள், இஃப்தா, அரபு நாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல துறைகளுடனான தொடர்பாடல்” என்ற கருப்பொருள் தாங்கி இந்த மாநாடு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு கட்டங்களைக் கொண்ட அமர்வுகளாக நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் மிதவாதம், தீவிரவாதம், சமூக சீரழிவு, தீவிரவாதம், பயங்கரவாதம், சகிப்புத்தன்மை மற்றும் மக்களுக்கிடையான சகவாழ்வு போன்ற தலைப்புகள் கலந்துரையாடப்படவுள்ளன. உலகில் உள்ள மத விவகார திணைக்களங்கள், இஃப்டா மற

அறிவிப்பாளர் போட்டியில் முதலிடம்!

Image
  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு நடாத்திய சிறுவர் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர் போட்டியில் பர்ஹி நமா முதலிடம் பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் இவர், ஊடகவியலாளர் எச்.எம்.எம்.பர்ஸான்,  எம்.எஸ்.நூரா தம்பதிகளின் புதல்வியாவார். பிரதேச மட்ட போட்டியில் வெற்றிபெற்று மாவட்ட மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவி பர்ஹி நமாவுக்கு பாடசாலை அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.எம்.முர்ஷித் from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/KCgxEVh via Kalasam

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

Image
எதிர்வரும் 3 தினங்களில் பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த விவாதத்தை இடைநிறுத்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்த முடியும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 3 நாள் விவாதம் அவசியம் என்றும், ஆனால் தற்போது அது தேவையில்லை என்றும் தெரிவித்தார். இந்த மூன்று நாள் விவாதத்தை உரிய நேரத்தில் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம் பெற்ற உரையாடல் பின்வருமாறு, ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – இன்றும் பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஊடகங்களிலும் வருகிறது. இது தொடர்பான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளன. இது தொடர்பாக, இன்றோ நாளையோ எடுக்கப்படுமா என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசுவதற்கு 3 நாட்கள் அவகாசம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த