Posts

Showing posts from June, 2024

ஒரு வருடத்துக்கு முன்பே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பஹ்மா!

Image
ஒரு வருடத்துக்கு முன்பே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பஹ்மா!  றுவென்வெல்லை கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா பஹ்மா என்ற மாணவி, ஒரு வருடத்துக்கு முன்பே க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார். கேகாலை மாவட்டத்தின் கன்னத்தோட்டை சுலைமானியாக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் பயின்று வந்த பஹ்மா, அடுத்த வருடமே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடமிருந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சி காரணமாக தனிப்பட்ட பரீச்சாத்தியாக ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சையில் தோற்றினார். அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி 2.0694 Z ஸ்கோர் புள்ளிகளுடன் இவர், 2 ஏ, 1 பீ சித்தியைப் பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகியுள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் இவர், 9 ஏ சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர், கன்னத்தோட்ட அல்ஹாஜ் பாஹிம் தம்பதிகளின் புதவியாவர்.(www.ceylonmuslim.com)  ➖ 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘 𝒐𝒏 𝑪𝒆𝒚𝒍𝒐𝒏 𝑴𝒖𝒔𝒍𝒊𝒎 𝑺𝒐𝒄𝒊𝒂𝒍 𝑴𝒆𝒅𝒊𝒂➖ 📲 WhatsApp: → https://ift.tt/HwpqfR0 𝕏 Twitter → h...

70 முஸ்லிம் மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய பரீட்சை திணைக்கம்: பெறுபேறுகள் இடைநிறுத்தம் - திருகோணலையில் சம்பவம் (வீடியோ)

Image
அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமையானது, திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (03) கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  இன்று (03) திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகைஸ், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது, பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள், செஞ்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மீதும் மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்தும் பாரிய சந்தேகத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது. வீடியோ; https://youtube.com/watch?v=hlzlFFwPOXg&si=Z2J1q8Y_dh9wv6RT   திருகோணமலை...