ஒரு வருடத்துக்கு முன்பே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பஹ்மா!


ஒரு வருடத்துக்கு முன்பே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான பஹ்மா! 

றுவென்வெல்லை கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா பஹ்மா என்ற மாணவி, ஒரு வருடத்துக்கு முன்பே க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் கன்னத்தோட்டை சுலைமானியாக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் பயின்று வந்த பஹ்மா, அடுத்த வருடமே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருக்க வேண்டும். ஆனால், தன்னிடமிருந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சி காரணமாக தனிப்பட்ட பரீச்சாத்தியாக ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சையில் தோற்றினார்.

அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின்படி 2.0694 Z ஸ்கோர் புள்ளிகளுடன் இவர், 2 ஏ, 1 பீ சித்தியைப் பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகியுள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் இவர், 9 ஏ சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர், கன்னத்தோட்ட அல்ஹாஜ் பாஹிம் தம்பதிகளின் புதவியாவர்.(www.ceylonmuslim.com) 


➖ 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘 𝒐𝒏 𝑪𝒆𝒚𝒍𝒐𝒏 𝑴𝒖𝒔𝒍𝒊𝒎 𝑺𝒐𝒄𝒊𝒂𝒍 𝑴𝒆𝒅𝒊𝒂➖


📲 WhatsApp: → https://ift.tt/HwpqfR0

𝕏 Twitter → https://ift.tt/uVUfw96

▶️ Youtube → https://ift.tt/a6QvzOT 

ⓕ Facebook →  https://ift.tt/xcjPEYl



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2UpIyBs
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!