Posts

Showing posts from July, 2024

கஞ்சிபான இம்ரான் அதிரடியாக கைது!

Image
கிளப் வசந்தவின் கொலையின் மூளையாகக் கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபான இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கஞ்சிபான இம்ரான் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லொக்கு பெட்டி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபான இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும்  துபாயில் மறைந்துள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பெட்டி என்பவரால் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. ஆதாரங்களின்படி, பிரான்ஸில் பதுங்கியிருந்த கஞ்சிபான இம்ரான், பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும் பிரெஞ்சு எல்லையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கிளப் வசந்தவை கொலை செய்ய பாதாள உலக குழு தலைவர் கஞ்சிபான இம்ரான் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவு செய்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/Ds0Txie via Kalasam

ரணிலை ரிஷாட் சந்தித்தாரா? நடந்தது என்ன?

Image
(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாத்  பதியுதீன்  இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததாகவும்  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் பரவியுள்ள செய்தி தொடர்பில் ரிஷாத் பதியுதீனை தொடர்பு கொண்டு கேட்டபோது  அவர் இவ்வாறு தெரிவித்தார். “அவ்வாறு நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவில்லை. இது ஒரு சிலரால் இட்டுக் கட்டப்பட்டு பரப்பப்படும்  பொய்யான செய்தியாகும். யுஎஸ்எட் நிறுவனம்  கலந்துரையாடல் ஒன்றை பத்தரமுல்லையில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மூன்று தினங்களாக நடத்தியது.  அதன் இறுதிநாள் நிகழ்வு இன்றாகும்  (31) வர்த்தகம் மற்றும் நிவாரணங்கள், நிதிநிலைமைகளைக் கையாளுதல்  தொடர்பிலான இந்த மகாநாட்டில் கலந்து கொள்ள முன்னாள்  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தலதா அத்துக்கோரள, மதுர விதாரண மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையா...

ஞானசார தேரருக்கு பிணையா ? விடுதலையா? வழக்கில் நடந்து என்ன?

Image
இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு, நான்கு வ­ருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட‌ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்ற‌ம் கடந்த 18 ஆம் திகதி உத்­த­ர­விட்­டது. இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யீட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தாக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கில் அளிக்­கப்­பட்ட தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்­துள்ள நிலையில், அம்மேன் முறை­யீட்டை விசா­ரித்து தீர்ப்­ப­ளிக்கும் வரையில் தன்னை பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி ஞான­சார தேரர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் திருத்தல் மனு தாக்கல் செய்தார். அம்­ம­னுவை விசா­ரித்த சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமார் ரத்னம் ஆ...

முஸ்லிம் காங்கிரஸுக்குள் குழப்பம்: உயர்பீடக் கூட்டம் ஒத்திவைப்பு

Image
( ஏ . எச் . சித்தீக் காரியப்பர் )  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில  நாட்களாக நாட்டில் நிலவும் அரசியல் மாற்றங்களைக் கட்சி அவதாளித்து வருவதாகவும் இதன் காரணமாக தமது கட்சி யாரை ஆதரிப்பது என்பது குறித்து உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது . இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில் , ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சில நாட்களாக அரசியல் கட்சிகளிடையே பல்வேறு நிலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது . இவ்வாறான நிலைமையை எமது கட்சி நிதானமாக அவதானித்து வருகிறது . பொதுஜன பெரமுனவின் அதிக எண்ணிக்கையான எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர் . இதேவேளை , கிழக்கிலங்கையைச் சேர்ந்த எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்க வேண்டு...

தனது விடுதலைக்கு உதவாத முஸ்லிம் தலைவர்கள் : ஞானசாரவின் கவலை

Image
நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அண்மையில் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் நேற்றைய தினம் தனியார் இணையத்தள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தான் ஆவேசப்பட்டு கருத்துக்களை வெளியிடும் போது தன்னை அறியாது மக்கள் மனது வேதனைப்படுவதை நான் நன்கு அறிந்து கொண்டேன் எனத் தெரிவித்திருந்தார் . கடந்த 2016 மார்ச் 30 ஆம் திகதி கூரகல விகாரை தொடர்பில் , இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து , இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டதை தான் ஏற்றுக் கொண்டதாகவும் அதற்காக நீதிமன்றம் ஊடாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாகவும் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார் . மேலும் , தன்னை ரணில் விக்கிரமசிங்க சிறைக்கு அனுப்பவோ , அவர் சிறையில் இருந்து விடுவிக்கவோ இல்லை என்றும் இது நீதிமன்ற வழக்கிற்கான தீர்ப்பு என நினைவு கூர்ந்தார் . தனக்கு பொ...

“கட்டாய ஜனாஸா எரிப்பு” முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக்கோரும் அரசு - அமைச்சரவை அனுமதி

Image
  கொவிட் -19 காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்ய வேண்டுமென தெரிவித்து 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/F2dXoMR via Kalasam
Image
  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்நான். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும், வடக்கு கிழக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி விடயங்களையும் அவருக்கு விளக்கினேன். அவற்றை ஜனாதிபதிக்கு விளக்கினேன். அவற்றை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவை செய்ய எனக்கு நிதியை வழங்கியிருக்கிறார். அதனைக் கொண்டு பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள், பிரதேச உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறேன். இந்த நிதி எனது சொந்த தேவைகளுக்கு தரப்பட்டதல்ல. பிரதேச அபிவிருத்தி பணிகளுக்கு தரப்பட்டவை. இதனைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள். எனக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள தொடர்பு என்ன என்று அரசியல்வாதிகள் சிலர் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், நான் படிக்கும் கா...

எனக்கு அதிகாரம் தந்தால், கஞ்சிபானி இம்ரானை இலங்கைக்கு கொண்டுவருவேன்- முன்னாள் பொலிஸ் பரிசோதகர்

Image
  தமக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் கஞ்சிபானி இம்ரானை இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய திறமை தனக்கு இருப்பதாக தற்போது பிரான்சில் தங்கியுள்ள முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், பொலிஸ் பரிசோதகராகவும்   கடமையாற்றிய  துமிந்த ஜயதிலக்க, தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அண்மையில் வெளிநாடு சென்றிருந்தார். போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கஞ்சிபானி இம்ரானின் பிறந்தநாள் விழாவில் துமிந்த ஜயதிலக்கவும் கலந்துக் கொண்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். “பாதாள உலக நபர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அது எனக்கு தேவையான ஒன்றும் இல்லை. தொழிலுக்காக அனைத்தையும் இழந்து வெளிநாடு ஒன்றுக்கு வந்து வாழ்ந்து வருகிறேன். எனது குழந்தை 05 மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை. என் மனைவி 12 வீடுகளுக்கு மாறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சனையும் உள்ளது. அது தொடர்பில் ...