இப்போதைக்கு சஜித்துக்கு ஆதரவு: முடிவில் மாற்றம் வரலாம்? மு.கா கூட்டத்தில் முடிவு



  • ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு.... !
  • முகா உயர்பீடக் கூட்டத்தில் முடிவு !

ஜனாதிபதி தேர்தலில் - சஜித்துக்கு ஆதரவு வழங்குவதென இன்று காலை கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் கொள்கையளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சஜித் அணியில் - முகா , தற்போது அங்கம் வகிப்பதன் காரணமாக - சஜித்துக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்ற பெரும்பாலான உயர்பீட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முகா எம்பீக்ள் - இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் எவருமே எந்தவொரு கருத்தினையும் முன்வைக்கவில்லை.

முகாவின் - இன்றைய தீர்மானம் கொள்கையளவில் எடுக்கப்பட்டுள்ள போதிலும் - தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதினால் - கட்சியின் முடிவில் மாற்றம் வரலாம் என நம்பப்படுகின்றது.

தபால் மூல வாக்களிப்பின் பின்னர் - மஹிந்தவுக்கு கடிதம் அனுப்பிவிட்டு மைத்திரிக்கி ஆதரவளிக்க முடிவு எடுத்ததைப் போன்று - ரணிலுக்கு ஆதரவு வழங்கும் முடிவையும் அவ்வாறே தலைவர் எடுப்பார் என உயர்பீட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

பாராளுமன்ற ஹரீஸ், பைஷால் காசீம் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரியவருகின்றது 



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ah0JgDv
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!