இதுவல்லவா இரகசிய தர்மம்? கள் – எலியவில் நல்லதொரு முன்னுதாரணம்
கள் – எலியவில் இரகசியமான முறையில் ஜனாஸா வாகனம் ஒன்று பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று, கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது.
‘ஜனாஸா சேவைக்கு’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனமொன்று, கள் -எலிய அல் – மஸ்ஜிதுஸ் ஸுப்ஹானி பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு முன்னால் அதன் சாவிக் கொத்துடன், வெள்ளிக்கிழமை காலையிலேயே நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு, அந்த ஊரையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக, கள் – எலிய “அல் – மஸ்ஜிதுஸ் ஸுப்ஹானி” பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர், பள்ளிவாசல் நிர்வாகச் செயலாளரினால் அறிவித்தல் ஒன்று வாசிக்கப்பட்டது.
அந்த அறிவித்தலில், “எமது பள்ளிவாசலுக்கு முன்னால், இன்று (31) காலை இலவச ஜனாஸா சேவை வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனமொன்று, அதன் திறப்புடன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதேவேளை, பதிவுத் தபாலில் வாகனத்துக்குரிய ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அத்தோடு, ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில், “இந்த வாகனத்தை, இப்பள்ளிவாசலுக்கு “வக்ஃப்” (பொதுச் சொத்தாக தர்மம்) செய்கின்றோம்” என்றும், “இவ்வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய நிபந்தனைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம்” என்று எழுதப்பட்டிருந்ததாகவும் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறு எழுதப்பட்டிருந்த அக்கடிதமே, அன்றைய தினம் ஊர் மக்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது, “இந்த ஸதகாவைச் செய்தவர்கள், “யார் – எவர்” என்பதை எவருக்கும் தெரியாமலேயே இரகசியமாக செய்திருப்பது தான்.
பேரும் – புகழும், பெயரும் – பாராட்டும் தேடிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இவ்வாறு இரகசியமாக தர்மம் செய்துள்ள இச்சம்பவம், பெரும் படிப்பினையை ஊட்டிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாது, அழகான தர்மம் – நல்லதொரு முன்னுதாரணமும் கூட.
VIDEO:
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ANtuPa5
via Kalasam

Comments
Post a Comment