மூதூர் தமிழ் கூட்டமைப்புக்கு : குச்சவெளி முஸ்லீம் காங்கிரசுக்கு !
குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையின் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். தௌபீக் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.
குச்சவெளி பிரதேச சபையில், அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயல்படுவர்.
மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவசாளராகவும் செயற்படுவர்.
மூதூர் பிரதேச சபையில், அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சபை உறுப்பினர் ஒருவர் தவுசாளராகவும், இலங்கை தமிழரசி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவசாளராகவும் செயற்படுவர்.
நிதி ஒதுக்கம் நிர்வாகம் அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளோடு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது
கியாஸ்
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/zc5pPV0
via Kalasam
Comments
Post a Comment